விமானத்தின் கறுப்புப் பெட்டியை கண்டுபிடித்தவர் காலமானார்


விமானத்தின் தகவல் பரிமாற்றத்தினை பதிவு செய்யும் கருவியான கறுப்புப் பெட்டியை கண்டுபிடித்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வாரன் இன்று காலமானார். 1934ல் டேவிட் வாரனின் தந்தை விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இதையடுத்து, விமான விபத்திற்கான காரணத்தை கண்டறிய உதவும் வகையில் கருப்புப் பெட்டியை அவர் கண்டுபிடித்தார்.

1953ம் ஆண்டு முதல் விமானங்களில் கறுப்புப் பெட்டி பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாரனுக்கு மனைவியும் 4 மகன்களும் உள்ளனர்.